Thursday, September 17, 2020

காரமான வெங்காய சட்னி



காரமான வெங்காய சட்னி செய்யலாம்... சாப்பிடலாம் ... அசத்தலாம்... வாங்க...

தேவையான பொருட்கள்:

* பெரிய வெங்காயம் -  3

* மல்லி விதை - 1 tsp

* காய்ந்த மிளகாய் -10

* வெந்தயம் - 1/4  tsp

* புளி - சிறிய உருண்டை

* உப்பு - தேவையான அளவு

* தேங்காய் எண்ணைய் - 2tsp

* காயப்பொடி -1  tsp

* கடுகு, கறிவேப்பிலை 

செய்முறை:

1. புளியில் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

2. ஒரு கடாயில் தேங்காய் எண்ணைய் சேர்த்து வெந்தயம், மல்லிவிதை சேர்த்து வறுக்க வேண்டும். 

3. அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சூடு ஆற வைக்க வேண்டும். ஆறியதும் பேஸ்ட்டாக அரைக்க வேண்டும்.

4. பெரிய வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டி தேங்காய் எண்ணையில் வதக்க வேண்டும். அதனுடன் புளி கரைசலை சேர்த்து 5 நிமிடம் கிளற வேண்டும்.அதில் அரைத்த பேஸ்ட் சேர்க்க வேண்டும்.

5. ஒரு கடாயில் தேங்காய் எண்ணைய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை காயப்பொடி சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி சூடாக பறிமாறவும்.. 

*** காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் சேர்த்தக் கொள்ளவும்... 

மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்...👉👉👉👉👉👉 CLICK HERE


நன்றி... வணக்கம்...




Saturday, May 23, 2020

மோர் குழம்பு செய்யலாம் வாங்க....

Welcome To Kitchen Book

மோர் குழம்பு செய்யலாம் வாங்க....

தேவையானவை:

1. தயிர் - 300 கிராம் ( ஓரளவு புளித்தது
.)

2. தேங்காய் துருவல்- 1 கப்

3. மிளகாய்-3

4. காயப்பொடி - 1டேபிள் ஸ்பூன்

5. இஞ்சி - 1 துண்டு

6. சீரகம் , கடுகு , கறிவேப்பிலை,  உப்பு, எண்ணெய்

7. கடலை பருப்பு , பச்சரிசி-1 டேபிள் ஸ்பூன்

8. சின்ன வெங்காயம்-3


செய்முறை :

1. தயிரை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கடைந்து எடுக்க வேண்டும்.

2. கடலை பருப்பு,  பச்சரிசி 1மணி நேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

3. தேங்காய் துருவல்,  சீரகம், இஞ்சி, கடலை பருப்பு,  பச்சரிசி, சின்ன வெங்காயம்,  மிளகாய் ஆகியவை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

4. அரைத்த மசாலாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் சிம்மில் 5 நிமிடம் வைக்க வேண்டும் .

5. மசாலா பச்சை வாசனை போன பின் கடைந்த தயிர் சேர்க்க வேண்டும்.  தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.  காயப்பொடி சேர்க்கவும்.

இப்பொழுது சுவையான மோர் குழம்பு ரெடி....

** இதனுடன் வெண்டைக்காய் அல்லது வடகம் அல்லது வெள்ளை பூசணி சேர்க்கலாம்.

** வெண்டைக்காய் அல்லது வடகம் சேர்த்தால் அதை எண்ணெய் ல் பொரித்து கடைசியாக குழம்பில் சேர்க்கவும்.

** வெள்ளை பூசணி என்றால் சிறிய துண்டுகளாக வெட்டி வேக வைத்து கடைசியாக குழம்புடன் சேர்க்க வேண்டும்.

** பருப்பு வடை இருந்தால் அதையும் குழம்பில் சேர்க்கலாம்.

மேலும் இது போன்ற சமையல் குறிப்புகள் காண இங்கே கிளிக் செய்யவும். Click here



Friday, May 22, 2020

மீல் மேக்கர் 65.....

மீல் மேக்கர் 65 ... செய்யலாம் வாங்க....

தேவையானவை:

மீல் மேக்கர் - 100 கிராம் 

மஞ்சள் தூள் 

மல்லித்தூள்- 1/4 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள்- 1/4டேபிள் ஸ்பூன் 

கறிமசாலா தூள் 

இஞ்சி , பூண்டு போஸ்ட்

பச்சரிசி மாவு  (அ) சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் 
 
உப்பு , எண்ணெய்


செய்முறை:

1. மீல் மேக்கர் சுடு தண்ணீரில் உப்பு 
    சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து பின்        நன்றாக பிழிந்து எடுக்க வேண்டும்.  

2. ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கர்                    மற்றும் மேலே கூறிய அனைத்து              பொருட்களையும் ஒவ்வொன்றாக            சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். 

3.குறைந்தது 1/2 மணி நேரம் ஊற               வைக்க வேண்டும்.  

4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மீல்      மேக்கரை பொறித்து எடுக்க                        வேண்டும். 

****** இப்பொழுது சுவையான மீல் மேக்கர் 65 ரெடி....
****** காரத்திற்கு ஏற்ப மிளகாய்பொடி சேர்க்கவும்....

மேலும் இது போன்ற சமையல் குறிப்புகள் காண இங்கே கிளிக் செய்யவும்....cclick here



Thursday, May 21, 2020

அவியல் இப்படி செய்து பாருங்க.....

அவியல் .... மிகவும் ஈஸியான முறையில் செய்யலாம் ...

அவியல் .... மிகவும் ஈஸியான  முறையில் செய்யலாம் ...

தேவையான பொருள்கள் : 


கத்திரிக்காய் - 2

வாழைக்காய் - 1

கேரட் - 2

முருங்கைக்காய் -1

மாங்காய் - 1

உருளை கிழங்கு - 1

சேனை கிழங்கு - 100 கிராம்

பீன்ஸ் - 5

தேங்காய் துருவல் - 1கப்

தயிர் - 1 கப்

சீரகம், 

மிளகாய் - 4

பூண்டு - 3 பல்

தேங்காய் எண்ணெய் , கடுகு , கறிவேப்பிலை

செய்முறை : 

** மேலே கூறிய அனைத்து  காய்கறிகளையும் சுத்தம்  வாக்கில் வெட்ட வேண்டும்.

** தேங்காய் துருவல், சீரகம் , மிளகாய் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு
சுற்று மட்டும் சுற்ற  வேண்டும் .

** ஒரு குக்கரில் வெட்டிய காய்கறிகள் , பூண்டு, தேங்காய் மசாலா , உப்பு , மஞ்சள் பொடி சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வைக்க வேண்டும் .

** ஒரு  கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு  ,கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காய்கறியில் தயிர் சேர்த்து சூடாக பரிமாறவும்.


****** மஞ்சள் பொடி விருப்பம் இருந்தால் மட்டும் சேர்க்கவும்.

மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் . click here


மீல் மேக்கர் குழம்பு....

Welcome To Kitchen Book

மீல் மேக்கர் குழம்பு செய்து பாருங்க....

தேவையானவை:

1. மீல் மேக்கர் - 100 கிராம் (சிறியது )

2. தக்காளி - 1

3. பெரிய வெங்காயம் - 1

4. சீரகம், சோம்பு , மஞ்சள் தூள்

5. இஞ்சி , பூண்டு போஸ்ட்

6. மல்லி தூள்- 1டேபிள் ஸ்பூன்

7. மிளகாய் தூள்- 1/2 டேபிள் ஸ்பூன்

9. உப்பு - தேவையான அளவு

10. கறிமசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

11.  தேங்காய் துருவல் - 1கப்


செய்முறை:

1. மீல் மேக்கரை சுடு  தண்ணீரில் உப்பு          சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து பின்            நன்றாக பிழிந்து எடுக்க வேண்டும்.

2. தேங்காய் துருவல் , சோம்பு , சீரகம்              தண்ணீர் சேர்த்து  நன்றாக அரைக்க          வேண்டும்.

3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு      , கறிவேப்பிலை சேர்த்து பொடியாக             வெட்டிய தக்காளி , வெங்காயம் ,                  மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து வதக்க            வேண்டும்.

4. அதனுடன் மீல் மேக்கர் மல்லி தூள்,            மிளகாய் தூள், இஞ்சி பூண்டு போஸ்ட்        தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும்.

5. தேங்காய் விழுது சேர்க்க வேண்டும்.

6. 5 நிமிடம் கொதித்ததும் கறிமசாலா            தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து                      அடுப்பை அனணத்து மல்லி இலை            சேர்த்து சூடாக பறிமாறவும்.


இப்பொழுது சுவையான மீல் மேக்கர் குழம்பு ரெடி......

மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.. Click here






பூண்டு குழம்பு செய்யலாம் வாங்க.......

பூண்டு குழம்பு எப்படி செய்யலாம் .... வாங்க ..... 

தேவையானவை:

1. பூண்டு - 50 கிராம்

2. சின்ன வெங்காயம்-  10

3. புளி - எலுமிச்சை அளவு

4. தேங்காய் துருவல்  - 1 கப்

5. மஞ்சள் தூள்,  சீரகம், மிளகு, சோம்பு

6.மிளகாய் தூள் - 1டேபிள் ஸ்பூன்

7. மல்லித்தூள் -2 டேபிள் ஸ்பூன் 

8. நல்லெண்ணைய், கடுகு, கறிவேப்பிலை 

செய்முறை:

1.நல்லெண்ணெய் ல் கடுகு ,                         கறிவேப்பிலை தாளித்து பூண்டு,               சின்ன வெங்காயம் , உப்பு , மஞ்சள்         தூள் சேர்த்து வதக்க வேண்டும். 

2. ஒரு கடாயில் சீரகம் , சோம்பு , மிளகு ,      தேங்காய் துருவல், மல்லித்தூள்,       
    மிளகாய் தூள் ஆகியவை வறுக்க            வேண்டும் . 

3.  வறுத்த பொருட்கள்                                         எல்லாவற்றையும் மிக்ஸியில்                     தண்ணீர் ஊற்றி அரைக்க                           வேண்டும். 

4.  அரைத்த பேஸ்ட்டை பூண்டு,                      வெங்காயத்துடன் சேர்க்க                            வேண்டும்.1டம்ளர் தண்ணீர் சேர்த்து      கொதிக்க வைக்க வேண்டும்.

5.  புளி கரைசல் , உப்பு சேர்க்க                         வேண்டும்.

6.  1ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி                  அடுப்பை 5 நிமிடம்  சிம்மில் வைத்து        அணைத்து விட வேண்டும்..

*******   இப்பொழுது சுவையான       பூண்டு குழம்பு ரெடி......

மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.... click here