காரமான வெங்காய சட்னி செய்யலாம்... சாப்பிடலாம் ... அசத்தலாம்... வாங்க...
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 3
* மல்லி விதை - 1 tsp
* காய்ந்த மிளகாய் -10
* வெந்தயம் - 1/4 tsp
* புளி - சிறிய உருண்டை
* உப்பு - தேவையான அளவு
* தேங்காய் எண்ணைய் - 2tsp
* காயப்பொடி -1 tsp
* கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
1. புளியில் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
2. ஒரு கடாயில் தேங்காய் எண்ணைய் சேர்த்து வெந்தயம், மல்லிவிதை சேர்த்து வறுக்க வேண்டும்.
3. அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சூடு ஆற வைக்க வேண்டும். ஆறியதும் பேஸ்ட்டாக அரைக்க வேண்டும்.
4. பெரிய வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டி தேங்காய் எண்ணையில் வதக்க வேண்டும். அதனுடன் புளி கரைசலை சேர்த்து 5 நிமிடம் கிளற வேண்டும்.அதில் அரைத்த பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
5. ஒரு கடாயில் தேங்காய் எண்ணைய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை காயப்பொடி சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி சூடாக பறிமாறவும்..
*** காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் சேர்த்தக் கொள்ளவும்...
மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்...👉👉👉👉👉👉 CLICK HERE
நன்றி... வணக்கம்...


No comments:
Post a Comment