தேவையானவை:
1. பூண்டு - 50 கிராம்
2. சின்ன வெங்காயம்- 10
3. புளி - எலுமிச்சை அளவு
4. தேங்காய் துருவல் - 1 கப்
5. மஞ்சள் தூள், சீரகம், மிளகு, சோம்பு
6.மிளகாய் தூள் - 1டேபிள் ஸ்பூன்
7. மல்லித்தூள் -2 டேபிள் ஸ்பூன்
8. நல்லெண்ணைய், கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
1.நல்லெண்ணெய் ல் கடுகு , கறிவேப்பிலை தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் , உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
2. ஒரு கடாயில் சீரகம் , சோம்பு , மிளகு , தேங்காய் துருவல், மல்லித்தூள்,
மிளகாய் தூள் ஆகியவை வறுக்க வேண்டும் .
3. வறுத்த பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
4. அரைத்த பேஸ்ட்டை பூண்டு, வெங்காயத்துடன் சேர்க்க வேண்டும்.1டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
5. புளி கரைசல் , உப்பு சேர்க்க வேண்டும்.
6. 1ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைத்து அணைத்து விட வேண்டும்..
******* இப்பொழுது சுவையான பூண்டு குழம்பு ரெடி......
மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.... click here
No comments:
Post a Comment